ஒருமுறை சத்திய லோகத்தில் இருந்து பிரம்மா கைலாயத்திற்கு வந்தார். வழியில் மயில் வாகனத்தில் முருகன் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்தும் பார்க்காதது போல பிரம்மா கைலாயத்திற்குள் நுழைந்தார். அவரைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ முருகனுக்கு விருப்பம் இல்லை. சிறிது நேரத்தில் பிரம்மா சத்தியலோகத்திற்கு புறப்பட்டார். அப்போதும் அங்கிருந்த முருகனை அவர் கண்டு கொள்ளவில்லை. சிவதரிசனம் செய்த பிறகும் ‘நான்’ என்னும் ஆணவம் நீங்காததைக் கண்ட முருகன் வெகுண்டார். பிரம்மாவை சிறையில் அடைத்தார். நடந்ததை அறிந்ததும் முருகனை விசாரித்தார் சிவன். “ தந்தையே...உம்மைத் தரிசிக்கும் முன்பு ஒருவருக்கு ஆணவம் இருப்பதில் வியப்பில்லை. ஆனால் சிவதரிசனம் கிடைத்த பின்னும் ஆணவம் நீங்காததால் தான் சிறையில் அடைத்தேன்” என்றார். ஆணவத்தைப் போக்கவே கோயிலில் கொடிமரத்தின் முன் பலிபீடம் உள்ளது. அங்கு ‘நான்’ என்னும் கொம்பு முளைக்காமல் இருக்க பக்தர்கள் வழிபடுவது அவசியம் என்கிறார் வாரியார்.