பதிவு செய்த நாள்
23
மே
2022
04:05
திருத்தணி : திருப்பதி - திருமலை தேவஸ்தான அதிகாரியான தர்மா ரெட்டி, நேற்று குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, நந்தவனத்தில் மரக்கன்றுகள் நட்டார்.திருப்பதி - திருமலை ஏழுமலையான் கோவிலின் நிர்வாக அதிகாரியான தர்மா ரெட்டி, நேற்று காலை குடும்பத்தினருடன் வேண்டுதலை நிறைவேற்ற, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.அவரை முருகன் கோவில் இணை ஆணையர் விஜயா வரவேற்றார். அதை தொடர்ந்து, தர்மா ரெட்டி குடும்பத்தாருடன் ஆபத்சகாய விநாயகர், சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகப் பெருமான் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டார். கோவில் இணை ஆணையர் விஜயா, கோவிலின் சார்பில் பிரசாதம் வழங்கி, மலர் மாலை அணிவித்து கவுரவித்தார்.மேல் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்தில், தர்மா ரெட்டி வேண்டுதலை நிறைவேற்ற, ஏழு மரக்கன்றுகள் நட்டார். அவருடன், திருப்பதி கோவில் நிர்வாக அலுவலர்கள் வந்திருந்தனர்.