காஞ்சி கோவில் சிற்றுண்டியகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2022 04:05
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில் சிற்றுண்டியகம் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் கலைத் திறனை எடுத்துக்காட்டும் வகையில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. ஏழாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலை காண சுற்றுலாப்பயணியர் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் வருவர். தொல்லியல் துறை பராமரிப்பில் இந்த கோவில் உள்ளது. சுற்றுலாப்பயணியர் வருகையை அதிகரிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் சிற்றுண்டியகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை. ஹிந்து கோவில்கள் குறித்த புத்தகங்கள் விற்பனை நிலையம் போன்ற வசதிகள் ஏற்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இதற்கான பணி துவங்கியது. இது குறித்து கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணியர் கூறும்போது, வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலாக கைலாசநாதர் கோவில் இருந்து வருகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியரை கவரும் வகையில் கட்டப்பட்டுள்ள சிற்றுண்டியகத்தில் குடிநீர் வசதி, கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.