ஆதிரெத்தினேஸ்வரர் வைகாசி விசாக திருவிழா ஜூன் 3 துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2022 02:05
திருவாடானை, திருவாடானை கோயில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 3 ல் துவங்குகிறது. திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.நாள் தோறும் காலை, மாலையில் சிறப்பு பூஜை, இரவில் பூதம், யானை, குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.ஜூன் 11ல் தேரோட்டம்மறுநாள் தீர்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை செயல்அலுவலர் பாண்டியன் மற்றும் 22 கிராம நாட்டார்கள் செய்து வருகின்றனர்.