பதிவு செய்த நாள்
24
மே
2022
03:05
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா சிறப்பு பெற்றது. இக்கோவிலின் தேர்த்திருவிழா கடந்த, 9ம் தேதி திருத்தேருக்கு முகூர்த்த கால் இடுதலுடன் துவங்கியது. 10ம் தேதி பூச்சாட்டு, 16ம் தேதி கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, 17ம் தேதி கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நடந்தது. திருவிழாவையொட்டி, இன்று மஞ்சள் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கிராம மக்கள், கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றியும், அடி அளந்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை (25ம் தேதி) மாவிளக்கு எடுத்து, பொங்கல் வைத்தல், அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. வரும், 26ம் தேதி முதல் மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது. 29ம் தேதி மகா அபிேஷகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.