1000ம் ஆண்டு பழமையான கோதீஸ்வர கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2022 12:05
அவிநாசி: கோமளவல்லி அம்பிகை உடனமர் கோதீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அவிநாசி வட்டம், நடுவச்சேரி கிராமத்தில், சுமார் 1000ம் ஆண்டுகள் பழமையான சோழ பட்டதரசியுமான கோதைபிராட்டியின், பெயரால் கொங்கு தேச மன்னன் அபிமான சோழ ராஜாதிராஜன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, கோவிலானது கோமளவல்லி அம்பிகை உடனமர் கோதீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நடுவச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள கோமள வல்லி அம்பிகை உடனமர் கோடீஸ்வரர் (எ) கோதீஸ்வர திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று காலை நான்காம் கால பூஜைகள், திருமுறை இசைத்தல் உள்ளிட்ட நிகழ்சிகளை தொடர்ந்து திருக்குடங்கள் கோவிலை வலம் வந்து, ஸ்தல சிவாச்சாரியார்களான வளையபாளையம் இளைய ஆதினம் பாலசந்தர் சிவாசாரியார்,ராஜ கார்த்திக்சிவம் மற்றும் அர்த்தநாரி சிவாச்சாரியார் ஆகியோர் விமானங்களுக்கு கும்பாபிசேகம் நடத்தினர். இதனையடுத்து, மகாதீபாராதனை, மகா அபிஷேகம், உபசார பூஜைகள், நடைபெற்றது. கும்பாபிசேக விழாவில் சுற்றுப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.