சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் திருவிழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2022 12:05
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசித் திருவிழா நாளை விநாயகர் ஊர்வலத்துடன் துவங்குகிறது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குபட்ட இக்கோயிலின் வைகாசி விசாக திருவிழா 20 நாட்கள் நடக்கும். முதல் 10 நாள் கிராமத்திலுள்ள சந்திவீரன் கூடத்திலும், அடுத்த 10 நாள் கோயிலிலும் நடக்கும். இத்திருவிழாவையொட்டி நாளை (மே 26) இரவு 8:00 மணிக்கு கோயிலிலுள்ள உற்சவ விநாயகர் சப்பரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு கிராமத்தில் உள்ள சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளுகிறார். அங்கு 10 நாட்கள் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, ஜூன் 5ம் தேதி விநாயகர் மீண்டும் கோயிலுக்கு திரும்புவார். அன்று காப்பு கட்டுதலுடன் கொடியேற்றப்பட்டு திருவிழா துவங்கும். பத்து நாள் மண்டகப்படியாக தினமும் சாமி வீதிவுலா நடக்கிறது. ஜூன் 9ல் திருக்கல்யாணம், ஜூன் 10 ல் கழுவன் திருவிழா, ஜுன் 13 ல் தேரோட்டம் நடக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக 2 ஆண்டுகளாக திருவிழா நடக்காத நிலையில் இந்த ஆண்டு பெரிய எதிர்பார்ப்புடன் திருவிழா நடக்கவுள்ளது.