காளஹஸ்தி சிவன் கோயிலில் ஹனுமனுக்கு அபிஷேக ஆராதனை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2022 08:05
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று அனுமன் ஜெயந்தியை யொட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அச்சுதராயர் மண்டபத்தில் உள்ள ஹனுமனுக்கு கோயில் வேதப் பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தினாரகள். மேலும் வேத பண்டிதர்களால் ஹனுமன் சிலைக்கு பல்வேறு விதமான சுகந்த ஜலத்தினால் அபிஷேகங்கள் நடத்தியதோடு தீப, தூப நைவேத்தியங்கள் சமர்ப்பித்து சுவாமியை சிறப்பு அலங்காரம் செய்தனர் .இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஸ்ரீ காலஹஸ்தி அடுத்துள்ள பங்கார் அம்மன் காலனி அருகில் உள்ள ஸ்ரீ சங்கட மோசன ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் சுவாமியை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.