ராமேஸ்வரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகில் ராமநாதசுவாமி கோயிலின் உபகோயில் தீர்த்தமான ராமர் தீர்த்தம் குளம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் நீராடி விட்டு ராமர் கோயிலில் தரிசிப்பது வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த தீர்த்த குளத்தை திருக்கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதமாக இக்குளத்தில் பராமரிப்பு பணிகளை செய்யாமல் கோயில் நிர்வாகம் ஒதுங்கியது. இதனால் தீர்த்த குளத்தில் பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தீன் பை, குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி, அசுத்தமாக கிடக்கிறது. இதனால் பக்தர்கள் அருவெருப்புடன் நீராடி செல்கின்றனர்.