பதிவு செய்த நாள்
26
மே
2022
12:05
செந்துறை, செந்துறை அருகே செங்குறிச்சி கிராமம் பாண்டியனூர் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி மே 24 கோவில் முன் உள்ள யாகசாலையில் முதல் கால யாக பூஜை புண்ணியாஜனம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, வேதிகா அர்ச்சனை, பூர்ணாகுதி, உள்ளிட்ட பூஜைகளுடன் செய்தபின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்த புறப்பாடு நடந்தது. மேளதாளம் முழங்க தீர்த்தக்குடம் கோவிலைச் சுற்றி வந்து கோவிலின் உச்சியில் உள்ள கலசத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கலசத்தில் புனித தீர்த்தங்கள் ஊற்றி கும்பாபிஷேகத்தை ராமசாமி ஐயங்கார் குமாரர்கள் செய்து வைத்தனர். அப்போது கருடன் வானத்தில் வட்டமடிக்க பக்தர்கள் குலவையிட்டு ஆரவாரம் செய்தனர். பின் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் செந்துறை, கம்பிளியம்பட்டி, மணக்காட்டூர், திருமலைக்கேணி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டியனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.