பழநி: பழநி மலை கோயில் வளாகத்தில் உள்ள போகர் சன்னதியில் போகர் ஜெயந்தி விழா மே.28 அன்று நடைபெற உள்ளது.
பழநி மலைக்கோயிலில் மே 28. வைகாசி மாத பரணி நட்சத்திரம் அன்று போகர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது இது குறித்து பழநி ஆதீனம், புலிப்பாணி பாத்திர சுவாமிகள் கூறுகையில், "பழநி தண்டாயுதபாணி நவபாஷாண சிலையை வடிவமைத்த போகர் சித்தரின் ஜெயந்தி விழா மே.28 சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக பொதுமக்கள் அனுமதி இன்றி நடந்தது. இந்த ஆண்டு போகர் ஜெயந்தி அன்று மதியம் 12:00 மணிக்கு போகர் சித்தர் வழிபட்ட மரகதலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும். அதன்பின் சித்தரால் எழுதப்பட்ட சுவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பாரம்பரியமாக நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.