Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போத்தனூர் பண்ணாரி மாரியம்மன் கோவில் ... மாரியம்மன் கோவில் மண்டல பூஜையில் சங்காபிஷேகம் மாரியம்மன் கோவில் மண்டல பூஜையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
55 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.41 கோடி: குழு அமைத்து பணிகள் துவங்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:
55 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.41 கோடி: குழு அமைத்து பணிகள் துவங்க நடவடிக்கை

பதிவு செய்த நாள்

27 மே
2022
12:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 41.22 கோடி ரூபாய் மதிப்பில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உட்பட, ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 55 கோவில்களில் திருப்பணி நடக்கவுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 1,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில், அந்தந்த கோவில்கள் வருமானத்தை பொருத்து, அதன் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவில்களின் வருமானத்தில் பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் கோவில் பராமரிப்பு, திருவிழா, திருப்பணி போன்றவை நடத்தப்படுகின்றன.

அறிவிப்பு: இந்நிலையில் 2022 - 2023ம் ஆண்டு சட்ட சபை கூட்டத்தொடரில் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் உள்ள 55 கோவில்களுக்கு திருப்பணி, குளம் சீரமைப்பு, அன்னதான கூடம், புதிய தேர் உள்ளிட்ட 159 பணிகளுக்கு மொத்தம் 41.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிக்கு 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தந்த கோவில்களுக்கு அரசு வழிகாட்டுதல்படி, திருப்பணி குழு கமிட்டிகள் ஆய்வு செய்த பின், அதற்கான பணிகள் துவங்க இருப்பதாக, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்விரு மாவட்டங்களிலும், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்கள் பல உள்ளன. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு கோவில்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு கோவிலும் திருப்பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் கோவில், விளக்கொளி பெருமாள் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், ராஜகோபால சுவாமி கோவில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் கோதண்டராமர் கோவில் ஆகிய ஐந்து கோவில்களில், திருப்பணிகள் நடக்க உள்ளன.

புதிய தேர் : பெயர் வெளியிடாத ஹிந்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 55 கோவில்களில், 159 பணிகள் நடப்பதற்கு அரசு அறிவித்துள்ளது. இதில் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் தேர் சீரமைப்பு, மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள் எம்பார் சுவாமி கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட இருக்கிறது.
குன்றத்துார் திருநாகேஸ்வரம் சேக்கிலார் கோவிலில் நடக்கும் 10 நாட்கள் திருவிழா, இதற்கு முன் ஒரு நாள் அரசு விழாவாக இருந்தது. இனி, மூன்று நாட்கள் அரசு விழாவாக நடக்க இருக்கிறது. அதேபோல், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை விளக்கு பூஜை நடந்தது. இனி ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், விளக்கு பூஜை நடக்க இருக்கிறது.அரசு வழிகாட்டுதல்படி திருப்பணி குழு கமிட்டி ஆய்வு செய்த பின், ஆகம முறைப்படி திருப்பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சீரமைக்கப்பட உள்ள கோவில் குளங்கள்

வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்
நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மலைவையாவூர்
அகத்தீஸ்வரர் திருக்கோவில், நெமிலிச்சேரி
அழகிய சிங்கப்பெருமாள் கோவில், காஞ்சிபுரம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar