ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ரெட்டையூரணி வில்லடிவாகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், வேலாயுதசுவாமி, சூலகாளியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீர், கோவில் கோபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது.