கோவில்பாளையம்: கோவில்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழா துவங்கியது. கோவில்பாளையத்தின் காவல் தெய்வமாக விளங்கும் சக்தி மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அதிகாலையில் கணபதி ஹோமம் நடந்தது. இரவு அம்மனுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு அம்மனுக்கு பூச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில்பாளையம், குரும்பபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 1ம் தேதி கம்பம் நட்டு பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி வரை தினமும் இரவு சிறப்பு வழிபாடு நடக்கிறது. 9ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், பூவோடு, அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்தி தேர் இழுத்தல் நடக்கிறது.