சாத்தபுரம் கணபதி கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2022 04:05
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்பாத்தி சாத்தப்புரம் பிரசன்ன மஹாகணபதி கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சியாக கொண்டாடினர்.
உற்சவத்தையொட்டி உள்ள நிகழ்ச்சிகள் கடந்த 24ம் தேதி துவங்கினர். அபிஷேகம், நித்தியபூஜை, ருத்ரகன பாராயணமும், தீபாராதனை, சூக்தாதிஜபம், அபிஷேகம், லட்சார்ச்சனை ஆகியவை விழாவையொட்டி நடைபெற்றது. உற்சவத்தின் சிறப்பு நாளான இன்று காலை 8 மணிக்கு பூர்ணாபிஷேகம், யானைகள் அணிவகுக்கும் "காழ்ச்ச சீவேலி", பஞ்சவாத்தியம் ஆகியவை நடைபெறறது. 12.15க்கு கும்பாபிஷேகம். தொடர்ந்து புஷ்பாபிஷேகம், மாலையில் யானைகள் அணிவகுக்கும் "காழ்ச்சசீவேலி", தீபாராதனை ஆகியவை நடந்தன. இரவு 9.30 மணிக்கு சிறப்பு அலங்கார பல்லக்கில் மூலவர் எழுந்தருளும் நிகழ்ச்சியோடு விழா நிறைவடைகிறது.