அதனையொட்டி, நேற்று மாலை மங்கள இசையுடன் விழா துவங்கி, கலச பிரதிஷ்டை, கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.இன்று 29ம் தேதி காலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர ஜபம் நடக்கிறது. காலை 8:00 மணிக்கு, குருபூஜை அபிஷேக குழு சார்பில், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.காலை 9:00 மணிக்கு, பூர்ணாஹூதியை தொடர்ந்து கலசம் புறப்பாடாகிறது காலை10:00 மணிக்கு, சுவாமிக்கு கலாசாபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.தொடர்ந்து திருவாசகம் முற்றோதலும், 7,000 பக்தர் களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், தேவசேனாதிபதி குருக்கள் செய்து வருகின்றனர்.குரு பூஜைக்கு பணமாகவோ, பொருளாகவோ நன்கொடை வழங்க விரும்புவோர், தேவஸ்தான அலுவலகத்தில் கொடுத்து, ரசீது பெற்றுக் கொள்ளலாம்.