நடுவீரப்பட்டு, நடுவீரப்பட்டு அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நடுவீரப்பட்டு அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு அங்காளம்மன் உற்சவம் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.