பதிவு செய்த நாள்
30
மே
2022
03:05
திருப்பாச்சூர்: திருப்பாச்சூர் வாசீஸ்வரசுவாமி கோவிலில், வரும் 3ம் தேதி, வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் உள்ளது தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வர சுவாமி கோவில். ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு, வைகாசி விசாக பெருவிழா, வரும் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை சுவாமி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.முன்னதாக ஒன்றாம் தேதி காலை, கிராம தேவதையான பாசூரம்மன் வழிபாடும், மாலையில் பாசூரம்மன் வீதியுலாவும் நடைபெறும். பின் இரண்டாம் தேதி காலை சொர்ணகாளி அம்மன் உற்சவமும், மாலை விநாயகர் உற்சவமும் நடைபெறும்.பின், நான்காம் தேதி காலை சூரிய பிரபை உற்சவமும், மாலை சந்திர பிரபை உற்சவமும் நடைபெறும்.
ஐந்தாம் தேதி காலை அதிகார நந்தி உற்சவமும், மாலை பூத வாகன உற்சவமும், ஆறாம் தேதி காலை கேடய உற்சவமும், மாலை நாக வாகன உற்சவமும் நடைபெறும்.அதைத் தொடர்ந்து ஏழாம் தேதி காலை கேடய உற்சவமும், மாலை பஞ்சமூர்த்தி உற்சவமும் நடைபெறும். எட்டாம் தேதி காலை அன்ன வாகன உற்சவமும், மாலை திருக்கல்யாணமும், யானை வாகன உற்சவமும் நடைபெறும்.
ஒன்பதாம் தேதி காலை, வைபவ வீதியுலாவும், மாலை ஊஞ்சல் உற்சவமும், 10ம் தேதி காலை கிளிக்கூண்டு உற்சவமும், மாலை குதிரை வாகன உற்சவமும், 11ம் தேதி காலை சிம்ம வாகன உற்சவமும், மாலை பிச்சாடனார் திருக்கோலத்தில் வீதியுலாவும், நடராஜர் அபிஷேகமும் நடைபெறும்.வரும் 12ம் தேதி, விடியற்காலையில் வெள்ளை சாத்துப்படியும், நடராஜர் வீதியுலாவும், மாலை ரிஷப வாகன உற்சவமும் நடைபெறும். 13ம் தேதி மாலை பூப்பல்லக்கு வீதியுலாவும், 14ம் தேதி மாலை ரிஷப வாகன வசந்த உற்சவமும், 15ம் தேதி காலை கொடியிறக்கமும், மாலை மஹா சாந்தி அபிஷேகமும் நடைபெறும்.