மாகாளியம்மனுக்கு பெண்கள் மாவிளக்கு, தீர்த்தக் காவடி எடுத்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2022 09:06
வெள்ளகோவில்: வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவில் பொங்கல் , மாவிளக்கு எடுத்து பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை பெண்கள் பொங்கலிட்டு, மாலை 200 க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து கோவிலை வலம் வந்து சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர். பக்தர்கள் கொடுமுடி சென்று காவிரி தீர்த்தம் எடுத்து கடைவீதி வழியாக வீரக்குமார் சுவாமி கோவில் வளாகம் சென்று சுவாமி தரிசனம் செய்துபின் மாகாளி அம்மன் கோவிலுக்கு சென்றனர். மாலை காவிரி தீர்த்தம் அபிஷேகம் அலங்கார பூஜை நடந்தது.