வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன், பகவதி அம்மன் கோயில் உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் கரகம் எடுத்து அம்மனை அழைத்து வந்தனர். அங்கப்பிரதட்சணம் செய்தும், மாவிளக்கு, பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தும் பக்தர்கள் வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை அம்மன் பூஞ்சோலை செல்லுதல், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.