நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர் திருவிழா : பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2022 06:06
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர் திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து பந்தல்காலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் யானை காந்திமதி முன்செல்ல பந்தல்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னிதி தெருவில் உள்ள கோயில் வாசல் மண்டபத்திற்கு அருகே நாட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆனிப்பெருந்திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக நெல்லை டவுன் புட்டபர்த்தி அம்மன் கோயில் திருவிழா வரும் 5ம் தியும், விநாயகர் திருவிழா வரும் 15ம் தேதியும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. ஆனிப்பெருந்திரு விழா கொடியேற்று நிகழ்ச்சி வரும் ஜூலை 3ம் தி கிறது. தேரோட்டம் ஜூலை 11ம் தேதியும் நடக்கிறது. கொரோனா பிரச்னை காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடப்பதால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.