வைகுண்ட பெருமாள் கோவிலில் தேரோட்டம்: வழிநெடுகிலும் பக்தர்கள் ஆரத்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2022 08:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வைகுண்ட பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்தது.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்ய தேசங்களில், 57வது திவ்ய தேசமாக காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் திகழ்கிறது.
பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படும், இக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, ராஜ வீதிகளிலும் உலா வருகிறார். மூன்றாம் நாள் உற்சவமான கடந்த 28ல் கருட சேவை உற்சவம் விமரிசையாக நடந்தது.ஏழாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு தேர் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள் நான்கு ராஜவீதிகளிலும் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.