திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் தெப்ப வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2022 09:06
திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் தெப்பக்குளத்தில் புதிய தெப்பம் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்ஸவத்திற்காக கார்காத்த வெள்ளாளர்கள் சமூகத்தினர் ரூ.25 லட்சம் செலவில் மரத்திலான புதிய தெப்பத்தை வடிவமைத்தனர். குளத்தில் கடந்த சில ஆண்டாக நீர் பெருகாததாலும், கொரோனா ஊரடங்கால் தெப்பம் நடைபெற வில்லை. நேற்று காலை 9:45 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு நடந்த தீபாராதனையில் பொன்னம்பல அடிகள் பங்கேற்றார். அங்கிருந்து ஊர்வலமாக தெப்பக்குளத்திற்கு வந்தார். கலசபூஜை, சிறப்பு தீபாராதனை செய்ததும் தெப்ப வெள்ளோட்டம் துவக்கி வைத்தார்.சீதளி குளத்தை ஒரு முறை தெப்பம் சுற்றி வந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகாசி விசாக விழாவின் பத்தாம் நாளை முன்னிட்டு ஜூன் 12 இரவு 8:00 மணிக்கு தெப்பக்குளத்தில் மூன்றுமுறை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி வலம் வருவார்.