திருப்பூர்: திருப்பூர், முதலிபாளையம் அடுத்த கெங்கநாயக்கன்பாளையம், முத்துநகர் வேட்டைக்கார சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில் பொங்கல் விழா, நடந்தது.காலையில் விநாயகர் பொங்கலுடன் நிகழ்ச்சி துவங்கியது. பெண்கள் கன்னிமார் சாமிக்கு பொங்கல் வைத்தனர். ஊர்காளியம்மன் கோவிலில் இருந்து படைக்கலம் எடுத்து வரப்பட்டது; இரவு, 10:00 மணிக்கு சூடு மண் பானையில் பெரிய பொங்கல் வைக்கப்பட்டது.நள்ளிரவு அபிேஷக, அலங்கார பூஜைகள், கிடா வெட்டு பூஜை நடந்தது. நேற்று வேட்டைக்கார சுவாமி, முனியப்பன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அன்னதானம், மஞ்சள் நீராட்டுதலுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.