வீச்சு கருப்பணசாமி கோவிலில் வேப்ப மரத்திற்கு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2022 03:06
பெரியகுளம்: வீச்சு கருப்பணசாமி கோவிலில் வேப்ப மரத்திற்கு பக்தர்கள் தண்ணீர் ஊற்றி, பூசாரி தீபாராதனை காட்டி வருகிறார்.
பெரியகுளத்தில் போலீசார் குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட வீச்சு கருப்பண்ணசுவாமி கோயிலில் மூன்று நாட்கள் திருவிழா நடந்தது. பக்தர்கள் சக்தி கரகம், மாவிளக்கு, முளைப்பாரி, பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். வைகாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இங்குள்ள வேப்பமரம் மற்றும் மரத்தில் உள்ள சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வேப்ப மரத்திற்கு தண்ணீர் ஊற்றினர். பூசாரி வினோத் கூறுகையில்: கோயில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள வேப்ப மரக்கன்றை எனது தாத்தா ராமு நட்டு வைத்தார். கோவில் மேற்கூரையை வேப்பமரம் தொட்டது. எனது தந்தை முருகன் மரம் வளர்வதற்கு தகுந்தவாறு மேற்கூரையை உடைத்தார். தற்போது மரம் 25 அடிக்கு மேலாக வளர்ந்துள்ளது. மரத்தின் நிழல் கோடை காலத்திலும் குளிர்ச்சியை தருகிறது. தினமும் கருப்பண்ணசாமி மற்றும் கோயில் பிரகாரங்களில் சுவாமிகளுக்கு பூஜை செய்வது போல் மரங்களுக்கும் பூஜை செய்து வருகிறேன்.பக்தர்கள் தண்ணீர் ஊற்றி வளர்க்கின்றனர் என்றார்.