மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா : பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2022 03:06
திட்டக்குடி: திட்டக்குடி மேலவீதி மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திட்டக்குடி மேலவீதி மகா மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று தேர்திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மகா மாரியம்மன் தேரில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர்இழுத்தனர். திட்டக்குடி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.