பதிவு செய்த நாள்
03
ஜூன்
2022
05:06
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று விநாயகர் பூஜை, வேதிகா அர்ச்சனை, முதல் கால பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 6:00 மணிக்கு பாலதண்டாயுதபாணி, விஷ்ணு துர்க்கை கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து பஞ்சமுக விநாயகர், துர்க்கை அம்மன் திருக்கோவில் களுக்கு மகா அபிஷேகமும் நடந்தன. காலை, 7:00 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், காலை, 10:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை ஆகியன நடந்தன. முற்பகல், 11:30 மணிக்கு அன்னதானம், அதை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி திருவீதி உலா, ஆறுமுகக் காவடி ஆட்டம், ஜமாப் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பால தண்டாயுதபாணி சுவாமி நற்பணி குழுவினர் செய்து இருந்தனர்.