பதிவு செய்த நாள்
03
ஜூன்
2022
06:06
குமராபுரி ஆதி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, காவிரி ஆற்றில் இருந்து, திரளான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
சென்னிமலையை அடுத்த குமராபுரியில் ஆதிவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி முடிந்து நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து, பெண்கள் நேற்று புனித நீர் எடுத்து வந்தனர். பிராட்டி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். நான்கு ராஜவீதி, குமரன் சதுக்கம், ஈங்கூர் ரோடு வழியாக தீர்த்தக்குட ஊர்வலம் கோவிலை அடைந்தது. இன்று மாலை விநாயகர் வழிபாடு, முதல் கால யாக வேள்வி நடக்கிறது. நாளை காலை இரண்டாம் கால யாக வேள்வி, பூர்ணாகுதி நடைபெறும். இதையடுத்து காலை, 6:௦௦ மணிக்கு கலச புறப்பாடு, விமானம் கும்பாபிஷேகம், ஆதி விநாயகர் மகா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதை தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.