சூலூர்: காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் மண்டல பூஜையை ஒட்டி, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சூலூர் அடுத்த காங்கயம்பாளையத்தில் உள்ள சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, திருப்பணிகள் முடிந்து, சமீபத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது. 11 வது நாளான நேற்று மாலை, பல்வேறு திரவியங்கள் மற்றும் பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. அதன் பின், சிறப்பு அலங்காரத்தில் சென்னியாண்டவ சுவாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மகா தீபாராதனைக்கு பின் அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.