திருஷ்டி கழித்த பொருட்களை மிதித்து விட்டால் துன்பம் நேருமா ?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2022 11:06
மக்கள் நடமாடும் இடத்தில் திருஷ்டி கழித்த பொருட்களைப் போட்டிருந்தால் அதை மிதிப்பவர்களுக்குத் துன்பம் நேராது. யார் போட்டார்களோ அவர்களையே அந்தக் கஷ்டம் சேர்ந்து விடும். மக்கள் புழக்கம் இல்லாத இடத்தில் யார் கண்ணிலும் படாமல் திருஷ்டி கழித்துப் போட வேண்டும். இது தான் உண்மையாகவே திருஷ்டியைப் போக்கும். தெருவில் அறியாமல் மிதித்து விட்டால் கால்களைக் கழுவிவிட்டு திருநீறு பூசிக் கொண்டால் போதும்.