திண்டிவனம் : திண்டிவனம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா நடந்தது.அக்னி வசந்த மகோற்சவ விழா கடந்த மாதம் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தீமிதி விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சம்பத்குமார், துணைத் தலைவர்கள் பிர்லா செல்வம், ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.