17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோவில் : அறநிலைத்துறை கையகப்படுத்த முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2022 12:06
கூடலுார்: கூடலுாரில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயில் ஹிந்து அறநிலையத்துறை கையகப்படுத்தி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்துள்ளது.
கூடலுார் தாமரைக்குளம் ரோட்டில் 17 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. 1440 -ம் ஆண்டில் கேரள மன்னர் பூஞ்ஞாற்று தம்புரான் காலத்தில் கோயில் கட்டப்பட்டு மானியமாக நிலங்களும், நீர்ப்பாசனத்திற்கு தாமரைக்குளம் அமைக்கப்பட்டது. இக்கோயில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இக்கோயிலை சீரமைக்க கூடலூர் ஹிந்து முன்னணி அமைப்பினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர ஆட்சேபனை இருந்தால் ஒரு வாரத்திற்குள் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ஆட்சேபனை மனு அளிக்கலாம் என்ற அறிவிப்பை கோயில் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் ஒட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹிந்து முன்னணி நகர தலைவர் பாண்டித்துரை, பொதுச்செயலாளர் ஜெகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.