சின்னமனூர்: சின்னமனூர் கருங்கட்டாக்குளம் காளியம்மன் கோயில் திருவிழா, கடந்த சில நாட்களாக நடைபெற்து வருகிறது. பக்தர்கள் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்தி, கடன்களை செலுத்தினார்கள். நேற்று மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. கோயிலில இருந்து தெற்கு ரத வீதி, மெயின் ரோடு வழியாக சென்று முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டது. திரளாக பெண்கள் முளைப்பாரி ஊர்வலத்தில் பங்கேற்றனர். முன்னதாக ஊர்வலத்தில் பல்வேறு மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. வாணவேடிக்கைகள், சிலம்பாட்டம், கத்திசண்டை நிகழ்ச்சிகள் காண்போரை கவர்வதாக இருந்தது.