புதுச்சேரி : பாரதி புரத்தில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலின் பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு, 1,008 கலச அபிஷேகம் இன்று நடக்கிறது.புதுச்சேரி கோவிந்தசாலை (பாரதி புரம்) கருணாநிதி வீதியில் அய்யப்ப சுவாமி கோவிலை, கடந்த 2003ம் ஆண்டு,சபரிமலை பிரதான தாந்திரி நிறுவினார். இதைதொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 11ம் தேதி பிரதிஷ்டா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதிஷ்டா தின விழாவை முன்னிட்டு, நேற்று மாலை 5:30 மணிக்கு, மஹா சுதர்ஸன ஹோமம் நடந்தது. சபரிமலை பிரதான தாந்திரி கண்டாரு ம ேஹஷ் மோகனரு கலந்து கொண்டு பூஜைகளை நடத்தினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரதிஷ்டா தினமான இன்று காலை 9:00 மணியளவில், அய்யப்ப சுவாமிக்கு 1,008 கலசங்களால் ஸஹஸ்ர கலச அபிஷேகம்நடக்கிறது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு புஷ்பாபிேஷகம் நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை, புதுச்சேரி அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.