தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயிலில் பூப்பல்லக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2022 10:06
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் 100வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா மே 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 12ல் பக்தர்கள் பால்குடம், அலகுகுத்தி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜூன் 13 ல் பட்டுப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க மின்னொளி அலங்கார பூப்பல்லக்கில் முக்கிய வீதிகளில் சுவாமி வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.