குன்னத்துார் அடுத்த வெள்ளிரவெளி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலின், 11ம் ஆண்டு குண்டம் மற்றும் திருத்தேர் விழா கடந்த 1ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4:00 மணிக்கு பாரியூர் அம்மனை அழைத்து வருதல், தொடர்ந்து, 5:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை தரிசித்தனர். அதன்பின், அம்மனுக்கு பொங்கல் வைத்து குண்டம் நிறைவு செய்தனர்.இரவு, 7:00 மணிக்கு பொங்கல் வைத்து, அக்னி அபிஷேக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, 10.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. திருவிழாவில், இன்று மாலை 4:00 மணிக்கு மீண்டும் திருத்தேர் வடம் பிடித்தல், நாளை அம்மன் முத்து பல்லக்கில் திருவீதி உலா, 20ம் தேதி மாலை 6:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.