ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட விழாவிற்காக, தேரினை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. கடந்த 2 வருடமாக ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இவ்வாண்டு ஜூலை 24 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி, ஆகஸ்டு 1ஆம் தேதி தேரோட்ட திருவிழாவினை வெகுவிமர்சையாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த வாரம் தேரினை தயார் படுத்துவதற்கு பூஜைகள் நடந்தது. இதனையடுத்து தேரினை தயார் செய்யும் பணிகளை ஊழியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தேரின் மேல் பகுதியில் மரச் சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தினசரி பணிகள் நடந்து வருகிறது. இந்த வருடம் தேரோட்ட திருவிழாவை மிகவும் சிறப்பாக நடத்த கோயில் நிர்வாகம் தயாராகி வருகிறது.