வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி வீரசின்னம்மாள் கோயில் திருவிழா 7 நாட்கள் நடந்தது. முதல்நாள் சுவாமி பெட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர். சந்தனகாப்பு கட்டி சாமி ஆட்டம் சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மன் கண் திறக்கப்பட்டு 11 சாமியாடிகளும் பூக்குழி இறங்கினர். சுவாமிக்கு பள்ளயம் பிரித்தல், பேய் ஓட்டம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காடன் கூட்டத்தார் பங்காளிகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.