நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2022 06:06
சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா ஜூலை 7 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்கு முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. தொடர்ந்து 15 நாட்கள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் இரவு சுவாமி, அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஜூலை 11 ல் 5 ம் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். 9 ம் நாள் திருவிழாவான ஜூலை 15 ல் தேரோட்டம் நடைபெறும்.