அலங்காநல்லூர்: அலங்காநல்லூர்அருகே அ.புதுப்பட்டியில் சோலைஅழகன் சுவாமி, ஆதிபராசக்தி, அங்காளபரமேஸ்வரி, தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு களரி உற்ஸவ விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை, 108 திருவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சக்தி கரகம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.