பதிவு செய்த நாள்
17
ஜூன்
2022
06:06
செஞ்சி: அனந்தபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அனந்தபுரத்தில் உள்ள பழமையான காமாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி சுவாமி விக்ரகங்கள் கரிகோல ஊர்வலம் நடந்தது. 16ஆம் தேதி காலை 10 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. அன்று மாலை யாகசாலை பிரவேசம், யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, விசேஷ மந்திர பாராயணம், விசேஷ திரவிய யாகமும், 10 மணிக்கு கடம் புறப்பாடும், 10:20 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மகா அபிஷேகம், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அனந்தபுரம் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.