பதிவு செய்த நாள்
19
ஜூன்
2022
08:06
சென்னை : சமயபுரம் மாரியம்மன் கோவில், கிழக்கு ராஜாகோபுர கும்பாபிஷேகம், வரும் 6ம் தேதி நடக்க உள்ளது.
இதுகுறித்த, ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு:திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து, ஜூலை 6ம் கிழக்கு ராஜகோபுர கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ஜூலை 3ல் யாகசாலை வளர்த்து, விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி, நவக்கிரஹ ஹோமங்கள் துவங்குகின்றன.
கும்பாபிஷேக நாளான, ஜூலை 6ம் தேதி அதிகாலை 4:30 மணிக்குநான்காம் கால பூஜை நடக்கிறது. காலை 6:00 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது.அன்று காலை, 6:45 மணிக்கு மாரியம்மன் ஆலய நுாதன ராஜகோபுரத்திற்கு, கும்ப நீர் சேர்க்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. யாகசாலை நேரங்களில் வேத, சிவாகம, அபிராமி அந்தாதி முற்றோதல் திருமுறை பாராயணங்கள்நடக்கின்றன. இவ்விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.