பழநி : பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் ரோப் கார் பராமரிப்பு பணி மும்முரமாக நடக்கிறது.
பழநி மலைக்கோயிலுக்கு மூன்று நிமிடத்தில் செல்லும் வகையில் தினமும் காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை ரோப் கார் இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதம் வரையும் நிறுத்துவது வழக்கம். நடப்பாண்டில் பராமரிப்புக்காக ஜூன் 16 முதல் ஜூலை 30 வரை 45 நாட்களுக்கு ரோப்கார் நிறுத்தப்பட்டுள்ளது.கம்பிவடக் கயிறு, கீழ்த்தளம், மேல்தள மோட்டார், பல் சக்கரங்கள், உருளைகளில் ஆயில், கிரீஸ் இடப்பட்டு தேய்ந்த பாகங்களை புதிதாக மாற்றும் பணி நடந்து வருகிறது. ரோப்கார் சேவை இல்லாததால் பக்தர்கள் இழுவை ரயிலில் (வின்ச்) நீண்ட நேரம் காத்திருந்தும், படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றனர்.