ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் 100வது திருவாசக முற்றோதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2022 11:06
இளையான்குடி: இளையான்குடியில் ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற 100வது திருவாசக முற்றோதல் விழாவில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
இளையான்குடியில் எம்பிரான் மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தின் சார்பில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மாதம் தோறும் ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் திருவாசக முற்றோதல் விழா நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று 100வது திருவாசக முற்றோதல் விழா சிவனடியார்கள் தாமோதரன், சிவாக்கரதேசிகர் ஆகியோர் தலைமையில் காலை 9:00மணி முதல் மாலை 5:00மணி வரை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இளையான்குடி,பரமக்குடி,ராமநாதபுரம், திருப்பாச்சேத்தி,காளையார்கோயில், சிவகங்கை, எமனேஸ்வரம்,பார்த்திபனூர் உள்ளிட்ட பல ஊர்களில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை எம்பிரான் மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.