பதிவு செய்த நாள்
20
ஜூன்
2022
11:06
காஞ்சிபுரம், காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜய யாத்திரையில், நேற்று இரவு, ஹைதரபாதில் இருந்து, துண்டிக்கல் என்ற பகுதிக்கு புறப்பட்டு சென்றார். காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி சங்கர மடத்தில் இருந்து விஜய யாத்திரைக்கு புறப்பட்டார். ஆந்திர மாநிலம், பொன்பாடி, கடப்பா, தாடிபத்திரி போன்ற பகுதிகளில் சுவாமிகளுக்கு, பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்குள்ள முக்கிய கோவில்களில், சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார். அங்கு அவரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்த விஜய யாத்திரையை தொடர்ந்து, சுவாமிகள் நேற்று இரவு 7:00 மணிக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் இருந்து, துண்டிக்கல் என்ற பகுதிக்கு புறப்பட்டார்.அங்குள்ள மகாவித்யா பீடத்தில் சுவாமிகள் தங்கி, நித்திய பூஜைகள் செய்கிறார். வரும் 27ம் தேதி வரை அங்கு வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார்.