திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே சோழம்பட்டி சிங்கம்புணரி ரோட்டில் அமைந்துள்ள பழநி விநாயகர் கோயிலுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. பழனி செல்லும் பக்தர்களை உபசரிக்கும் வகையில் சோழம்பட்டியில் 1970 முதல் நகரத்தார் காபி வழங்கி வருகின்றனர். அந்த இடத்தில் 2000 ல் பழநி விநாயகர் கோயில் அமைக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. தற்போது 21 ஆண்டுகளுக்கு பின் இக்கோயிலில் பழநி விநாயகர், தண்டாயுதபாணி, நாகர் சன்னதிகளுக்கு திருப்பணி நடந்தது. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு ஜூன்17 ல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. பூஜைகள் ராஜாமணி குருக்கள் தலைமையில் நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் முதலாம் காலயாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் மகா பூர்ணாகுதி, தீபாராதனை முடிந்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் விமானத்திற்கு புறப்பாடாகியது. தொடர்ந்து காலை 10:15 மணிக்கு கும்பாபிேஷகம் நடந்தது. பின்னர் மூலவர் விநாயகருக்கு மகா அபிேஷகம் நடந்து சோழம்பட்டி கிராமத்தினரால் பட்டு சாத்தப்பட்டது. ஏற்பாட்டினை திருப்பணிக் குழு தலைவர் கவிஞர் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்தனர்.