சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ., வெங்கடேசன், எஸ்.பி., சிவபிரசாத், டி.எஸ்.பி., பாலசுந்தரம் இன்ஸ்பெக்டர் சிவபாலன், கோயில் நிர்வாக அதிகாரி இளமதி உள்ளிட்டோர் வடம் பிடித்து விழாவை துவக்கினர். நான்கு ரத வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து தேரை இழுத்து வந்தனர். தாசில்தார் நவநீதகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன் செயல் அலுவலர் சுதர்சன், எம்.வி.எம் குழும தலைவர் மணிமுத்தையா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஐயப்பன் கோயிலில் வட்ட பிள்ளையார் கோயில் நண்பர்கள் சார்பில் நடந்த அன்னதானத்தை டாக்டர் மருதுபாண்டியன் துவக்கி வைத்தார். நாளை இரவு வைகை ஆற்றில் அம்மனுக்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது.