Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரத்தின வலம்புரி விநாயகர் கோவில் ... ஏகவள்ளி அம்மன் கோவில் திருவிழா ஏகவள்ளி அம்மன் கோவில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாளின் 22 அடி நீள திருமேனி திருப்பணி நிறைவு
எழுத்தின் அளவு:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாளின் 22 அடி நீள திருமேனி திருப்பணி நிறைவு

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2022
01:06

திருவட்டார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாட்கள் நெருங்கி வருவதால், முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆதிகேசவ பெருமாளின் 22 அடி நீளம் கொண்ட திருமேனியின் திருப்பணிகள் நிறைவடைந்து உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிற 6ம்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.


வேணாட்டு அரசர்களால் கலை நயத்துடன்கம் பீரமாக வடிவமைக்கப்பட்ட பழமையான இத்திருக்கோவிலில் ஏற்பட்ட சிதிலங்களை, பழமை மாறாமல் புதுப்பித்து பக்தர்கள் ஒத்துழைப்புடன் கும்­பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கோவில் திருப்பணிகளுடன், கும்பாபிஷேகத்திற்கான அலங்கார பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. 22 அடி நீளம்கொண்ட பெருமாள் திருமேனி திருவட்டாரின் தனிச்சிறப்பாகும். சாளகிராமங்களால் வடிவமைக்கப்பட்டு, கடுகு சர்க்கரையோகத்தால் பூசப்பட்ட திருமே னி பக்தர்க ளுக்கு ஆனந்த தரிசனத்தை அளிக்கும். பல வருடங்களுக்கு முன் திருமேனியில் அணிவிக்கப்பட்டிருந்த தங்ககவசமும், திருவாபரணங்களும் திருடப்பட்டபோது, திருமேனியில் காயங்கள் ஏற்பட்டன. இதை நிவர்த்தி செய்ய புதிதாக கடுகு சர்க்கரையோகம் பூசும்ப ணியும் தற்போது நடந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட திருமேனியின் திருப்பணிகள் இரண்டு நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.


அரிய பொருட்களால் நுட்பமானபணிகளுடன் மேற்கொண்டபணிகள் இறை அருளால் திருப்திகரமாக முடிக்கப்பட்டதாக தந்திரி சஜித் சங்கரநாராயணரு தெரிவித்தார். வரும் 29ம்தேதி கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் ஆரம்பமாகிறது. அன்றைய தினம் புதுப்பிக்கப்பட்ட திருமேனி மரபு ப டி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். 7 ஆண்டுகளாக பாலாலய பிரதிஷ்டையில் இருக்கும் மூர்த்திகள் 30ம்தேதி கருவறைக்கு எழுந்தருளும். கோவில் சுவர்களில் வரையப்பட்டு உள்ள சுவர் ஓவியங்களை தொல்லியல்துறை சிறப்பு அதிகாரி லோகநாதன் ஆய்வு செய்தார். கும்பாபிஷேக நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என துறை அதிகாரிகள் கணித்து உள்ளனர். கும்பாபிஷேகத்தின் போது மட்டும் 25 ஆயிரம் பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சீரான வாகன போககுவரத்து உறுதி செ ய்யவும் போலீஸ அதிகாரிகள் மற்றும், அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். விழாவில் வெளியூர் பக்தர்களும் அதிக அளவில் வர உள்ளதால் கோவிலுக்கு வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar