பதிவு செய்த நாள்
25
ஜூன்
2022
05:06
புதுச்சேரி : எல்லப்பிள்ளைச்சாவடியில் உள்ள சாரதாம்பாள் கோவிலில் நாளை (26ம் தேதி) முதல், 3ம் தேதி வரை தசாவதார உபன்யாசம் நடக்கிறது.தினமும் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை நடக்கும் தசாவதார உபன்யாசத்தை, பரனுார் கிருஷ்ண ப்ரேமி சுவாமிகளின் மகன் ஹரி அண்ணா நிகழ்த்துகிறார்.நாளை (26ம் தேதி) மத்ஸ்யாவதாரம், கூர்மாவதாரம், 27ம் தேதி வராஹவதாரம், நரசிம்ஹாவதாரம், 28ம் தேதி வாமனாவதாரம், 29ம் தேதி பரசுராமாவதாரம்,
ஸ்ரீராமாவதாரம், சீதா கல்யாணம், 30ம் தேதி ஸ்ரீ ராம சரித்ரம் பட்டாபிஷேகம், பலராமாவதாரம், ஸ்ரீக்ருஷ்ணாவதாரம், 1ம் தேதி ஸ்ரீக்ருண லீலைகள், 2ம் தேதி ருக்மணி கல்யாணம் கல்கியவதாரம் குறித்து உபன்யாசம் நடக்கிறது.வரும் 1ம் தேதி இரவு 7:00 மணி முதல் 9:00 நடக்கும் கிருஷ்ண லீலைகள் நிகழ்ச்சியை, ராஜகோபால் ஹரிஜி, ஹரி அண்ணா ஆகியோர் நிகழ்த்துகின்றனர். தொடர்ந்து, 3ம் தேதி காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை உஞ்சவ்ருத்தி, திவ்ய நாம பஜனை மற்றும் ஸ்ரீ ராதா கல்யாண மகா உற்சவம் நடக்கிறது. அன்று இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை ஆசார்யர்களும் அரங்கனும்- ஸங்கீத உபன்யாசம் ஸ்ரீமதி விசாகா ஹரிஜியால் நிகழ்த்தப்படுகிறது.ஏற்பாடுகளை புதுச்சேரி ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமிக பஜனை மண்டலியினர் செய்து வருகின்றனர்.