கடலுார், : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம் புட்லாயி மகா மாரியம்மன் கோவில், கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, கொடிமரம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.கடலுார், திருப்பாப்புலியூர், குப்பன்குளம், பாரதிதாசன் நகரில் புட்லாயி மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு புதியதாக கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு, கோவில் மற்றும் விமான திருப்பணிகள் முடிக்கப்பட்டது.அதையடுத்து, 27ம் தேதி காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்கள் கும்பாபிேஷகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று பூஜைகள் துவங்கியது. மேலும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொடிமரம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.